கல்லூரிச் செயலாளர் அருட்சகோதரி பாத்திமா லூயிஸ், முதல்வர் எம். எஸ். ரூபா மற்றும் துணை முதல்வர் மதுரவள்ளி ஆகியோர் முன்னிலையில் டி. விஜயலக்ஷ்மி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு விழாவைத் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடைபெற்றன. இதில் மாணவிகள் பரதநாட்டியம், தனிநபர் பாடல், தனிநபர் நடனம், குழு நடனம் உள்ளிட்ட பல்வேறு கலைப் போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தினர். இவ்விழாவில் கல்லூரியின் பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மாணவிகள் கலந்துகொண்டனர்.