தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநிலச் செயல் தலைவர் பழரசம் பா. விநாயகமூர்த்தி, தூத்துக்குடி மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சரவணாஸ் செந்தில் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும், பிளாஸ்டிக் சங்க நிர்வாகிகள் செந்தில், ராசி சுதாகர், ஜெயராஜ் மற்றும் கிளைச் சங்கப் பிரதிநிதிகளான புதிய பேருந்து நிலைய வியாபாரிகள் சங்கச் செயலாளர் தளபதி செபாஸ்தியான், வ.உ.சி. சந்தை சுற்றுவட்டார வியாபாரிகள் சங்கச் செயலாளர் செல்வராஜ் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், சிறு மற்றும் கடலோர வணிகர்களைத் தேவையின்றித் தொந்தரவு செய்யாமல், அதேவேளையில் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை முழுமையாக ஒழிப்பது எவ்வாறு என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

மாநகராட்சியின் பிளாஸ்டிக் இல்லா நகரம் என்ற இலக்கிற்குத் தூத்துக்குடி மாவட்ட வணிகர்கள் முழு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என மாநிலச் செயல் தலைவர் பழரசம் பா. விநாயகமூர்த்தி பேசினார்.

வணிகர்களின் கோரிக்கைகளைக் கனிவோடு கேட்டறிந்த மாநகராட்சி ஆணையர் சி. பிரியங்கா மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு வணிகர் சங்க நிர்வாகிகள் தங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர்.