தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலத்தின் சார்பில் நாசரேத்தில் உள்ள மர்காசிஸ் நகரில் இயங்கி வரும் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் கணினி துறை மன்றம் துவக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தாளாளர் மற்றும் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல செயற்குழு உறுப்பினர் மாமல்லன் தலைமை தாங்கினார்.

கணினி துறை பாடகர் குழுவினர் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் இறைவணக்கப் பாடலை பாடினர். மாணவர் மரிய கிறிஸ்டன் வேத பாடம் வாசித்தார். மாணவி சேலா ஆரம்ப ஜெபம் செய்தார். கணினி துறை தலைவி ஜெமில்டா வரவேற்புரை நிகழ்த்தினார். ஜென்சி ராஜகுமாரி மன்றம் பொறுப்பாளர்களை அறிமுகம் செய்தார்.

மன்ற செயலர் ஓபேத் ராஜசிங் திட்டங்கள் பற்றி விளக்கினார். சிஎஸ்ஐ மாணவர் சாப்டர் பொறுப்பாளர்களை ஒருங்கிணைப்பாளர் ரெஜினா எலிசபெத் அறிமுகம் செய்தார். அதன் திட்ட அறிக்கையை செயலர் மீகா எபநேசர் வாசித்தார். கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் தலைமை உரை ஆற்றினார்.

நாசரேத் மர்காசிஸ் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெபசிங் கால்டுவெல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, செய்தி மலரை வெளியிட்டு, சிறப்புரை ஆற்றினார். பொருளாளர் விஜயசாந்தி நன்றியுரை நிகழ்த்தினார்.