தாராபுரம் சட்டமன்றத் தொகுதி திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் கனிமொழி சுகன்யாவை ஆதரித்துக் கொளத்துப்பாளையம் பேரூர் பகுதியில் முன்னாள் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான கீதா ஜீவன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

உடன் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினரும் தலைமைச் செயற்குழு உறுப்பினருமான ஜி.வி. மார்க்கண்டேயன், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி, தூத்துக்குடி மாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன் உள்ளிட்ட ஒன்றிய, பேரூர் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.