இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் முத்து முருகன் தலைமை வகித்தார். ரோட்டரி சங்க செயலாளர் ரமேஷ் குமார்,
கரிதா பப்ளிக் பள்ளி தாளாளர் காசிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல் மருத்துவ முகாமை ரோட்டரி மாவட்ட முன்னாள் உதவி ஆளுநர் முத்து செல்வம் துவக்கி வைத்தார்.
பல் மருத்துவர் சுதாகர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஏ.ஜ டெக்னாலஜி ஸ்கேன் மிஷின் மூலம் வாய்ப் பகுதியினை ஸ்கேன் செய்து பல் மருத்துவம் குறித்து மருத்துவ ஆலோசனை வழங்கினார். இதில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் மாரியப்பன், நடராஜன் உள்பட ஆசிரியர்கள் மாணவர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

