தூத்துக்குடி அண்ணாநகரைச் சோ்ந்த சுப்பையா மகன் மாரியப்பன் (55). மளிகைக் கடைக்காரரான இவா், 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த 2021இல் புதுக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி முருகன், குற்றஞ்சாட்டப்பட்ட மாரியப்பனுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை, ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து நேற்று வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டாா்.