தூத்துக்குடி செயின்ட் மேரீஸ் காலனி பகுதியைச் சேர்ந்தவர் தேவி (32). கடந்த 2024-ஆம் ஆண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த தேவியின் தாயாரிடம் இருந்த 8 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
திருடப்பட்ட நகைகளைத் திரும்பக் கொடுத்துவிடுவதாகக் காவல் நிலையத்தில் உறுதியளித்தும், இதுவரை நகைகளைக் கொடுக்காமல் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருவதாகத் தவெக திருச்செந்தூர் செயற்குழு உறுப்பினர் ரோகிணி அனிதா என்பவர் மீது தென்பாகம் காவல் நிலையத்தில் தேவி புகார் மனு அளித்துள்ளார்.
முன்னதாக, தவெக நிர்வாகிகள் மீது பாலியல் தொந்தரவு மற்றும் மிரட்டல் புகார்களைக் கூறி பரபரப்பைக் கிளப்பியவர் இந்த ரோகிணி என்பது குறிப்பிடத்தக்கது. இப்புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

