தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச்சேவைகள் துறையின்கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அறிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச்சேவைகள் துறையின்கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் பணியிடம் (1 காலி பணியிடம்) நிரப்புவதற்கு மாதம் ரூ.27,804/- (ரூபாய் இருபத்து ஏழாயிரத்து எண்ணூற்று நான்கு மட்டும்) முற்றிலும் தற்காலிக தொகுப்பூதிய ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய அங்கிகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் B.L. / LLB தேர்ச்சி பெற்று,

(10 + 2 + 5) அல்லது (10 + 2 + 3 + 3) என்ற அடிப்படையில் கல்வி தகுதி மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகள் சார்ந்த அரசு / தன்னார்வ தொண்டு நிறுவனம் / சட்ட விஷயங்களில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவத்துடன், பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு பிரச்சனைகள் பற்றிய நல்ல புரிதலுடன் கூடிய 42 வயதிற்குட்பட்ட விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேற்கண்ட பணியிடத்திடத்திற்கான விண்ணப்பபடிவத்தை தூத்துக்குடி மாவட்ட இணையதளத்தில் (https://thoothukudi.nic.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். தகுதி வாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிக்கு அதற்கான அமைந்த படிவத்தில் 05.10.2026 அன்று மாலை 5.00 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 176, முத்துசுரபி பில்டிங், மணிநகர், பாளை ரோடு, தூத்துக்குடி மாவட்டம்- 628 003 , தொலைபேசி எண் – 0461-2331188 முகவரியில் கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பிக்கலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேரவேண்டும். மேலும் முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள், கல்வி சான்றிதழ் நகல்கள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் மற்றும் காலதாமதமாக வரப்பெறும் விண்ணப்பங்கள் முன்தகவலின்றி நிராகரிக்கப்படும். இது தொடர்பாக எந்தவொரு கடித போக்குவரத்தும் மேற்கொள்ளப்பட மாட்டாது. தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.