தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் இன்று (02.09.2026), முன்னாள் படை வீரர்கள் நலத்துறை சார்பில் முன்னாள் படைவீரர் மற்றும் அவரைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்றது.
முன்னாள் படை வீரர் மற்றும் அவரைச் சார்ந்தோர்களிடமிருந்து இலவச வீட்டுமனை பட்டா, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோருதல், பட்டா மாறுதல் போன்ற பெறப்பட்ட 18 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட முன்னாள் படைவீரர்கள், அவர்களது குடும்பத்தினர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நல அலுவலர், லெ.பெருமாள் (ஓய்வு) மற்றும் அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

