3 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் இன்று மீண்டும் தொடங்கியது. இதில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதல்-அமைச்சர் விஜய் பதிலுரை அளித்து பேசினார். இதையடுத்து முதல்-அமைச்சர் விஜய்யின் பேச்சுக்கு பதிலளிக்க திமுக உறுப்பினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

முதல்-அமைச்சர் பேச்சுக்கு இடையூறு செய்ததால் திமுகவுக்கு பேச அனுமதி தர முடியாது என்று சபாநாயகர் கூறியதால், சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பினர். சுமார் 20 நிமிடங்கள் சட்டசபையில் அமளியில் ஈடுபட்டநிலையில், திமுக எம்எல்ஏக்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.