தூத்துக்குடி தொழிலதிபர் கே.சுப்பிரமணியன் மதுரம் அவர்களின் பேத்தியும் தூத்துக்குடி மதுமனீஸ் டிஜிடெக் நிறுவன உரிமையாளர் ஆறுமுககுமார் - லட்சுமி பிரபா மகள் மதுமிதா மற்றும் பாலசுப்பிரமணியன் - அங்கயற்கன்னி மீனா ஆகியோரின் புதல்வன் விஷ்னுராஜ் திருமண வரவேற்பு விழா தூத்துக்குடி ஏ.எஸ்.கே.ஆர்., திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் முன்னாள் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் மற்றும் தொழிலதிபர்கள், புகைப்பட கலைஞர்கள், முக்கிய பிரமுகர்கள், உறவினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். நிறைவாக மணமகளின் சகோதரர் கிஷோர் நன்றி தெரிவித்தார்.