தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள குருவிநத்தம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். பள்ளியில் தலைமை ஆசிரியர் ஒருவரும் ஒரு ஆசிரியை ஒருவரும் பணிபுரிந்து வந்தனர். தற்போது அந்த ஆசிரியை உடல்நலம் சரியில்லாததால் நீண்ட விடுப்பு எடுத்து சென்று விட்டாராம்.

இதனால் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளின் படிப்பு முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு பதிலாக வேறு ஒரு ஆசிரியையை நியமனம் செய்ய முதன்மை கல்வி அதிகாரிக்கு மனு கொடுத்தோம் எங்களது மனு மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உடனடியாக பள்ளிக்கு ஒரு ஆசிரியை நியமிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.