தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்ற முறைகேடு வழக்குத் தொடர்பாக, பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்த வழக்கில் மறுவிசாரணை நடத்த நீதிமன்ற உத்தரவிட்டது.

இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பி சரவணபெருமாள் உத்தரவின் பேரில் டிஎஸ்பி ஜெயபால் பர்னபாஸ் விசாரணை நடத்தினார். அதில், சொசைட்டியில் கையாடல் செய்யப்பட்ட தங்க நகைகளை 1-வது எதிரியான செயலாளர் தேவராஜ் தனது கார் டிரைவர் மற்றும் உதவியாளர்கள் மூலம் பல்வேறு கூட்டுறவு சங்கங்களிலும், வங்கிகளிலும் மறுஅடமானம் செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

அதன்படி, 1-வது எதிரியான தேவராஜின் கார் டிரைவரான ஆறுமுகநேரி மடத்துவிளையைச் சேர்ந்த இசக்கிமுத்துவின் மகன் முத்துச்சாமி (47), தேவராஜ் வீட்டில் வேலை செய்து வந்த முத்துச்சாமியின் மனைவி கிருபா (44), திருச்செந்தூர் வீரபாண்டியபட்டினம் அண்ணாநகரைச் சேர்ந்த பூவலிங்கம் மகனும் தேவராஜ் வீட்டில் எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்தவருமான முருகன் (62) மற்றும் தேவராஜுக்குத் தெரிந்த நபரான திருச்செந்தூர் பெருமாள் மகன் இசக்கித்துரை (33) ஆகிய 4 பேரை கைது செய்து இன்ஸ்பெக்டர் ஜெயந்தி விசாரணை நடத்தி வருகிறார்.