தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காந்தாரி அம்மன் கோவில் புரட்டாசி மாத கோவில் திருவிழா கடந்த மூன்று நாட்களாக குத்துவிளக்கு,பூஜை பால்குடம் ஊர்வலம், அக்னி சட்டி ஊர்வலம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது, திருவிழாவின் முக்கிய நிகழ்வான முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.
இதனை முன்னிட்டு ஸ்ரீ காந்தாரி அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார தீபாதாரணை நடைபெற்றது, பின்னர் கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த முளைப்பாரியை சுற்றி ஏராளமான பெண்கள் அம்மனின் பாடல் பாடி கும்மி அடித்தனர், பின்னர் நையாண்டி மேளம் வானவேடிக்கையுடன் முளைப்பாரி ஊர்வலம் நாகலாபுரம் பஜார் பகுதி வழியாக சென்று நிறைவடைந்தது.
இதனைத் தொடர்ந்து காந்தாரி அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கும் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

