தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கொண்டு வருவதே ராகுல் காந்தியின் முதன்மை இலக்கு : முத்தழகன் பேட்டி!
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி மீண்டும் காங்கிரஸ் ஆட்சியைக் கொண்டு வருவதே ராகுல் காந்தியின் முதன்மை இலக்கு என்று காங்கிரஸ் கட்சியின் மறுசீரமைப்புப் பார்வையாளர் முத்தழகன் தெரிவித்தார்.
தேசியக் கராத்தே போட்டியில் தூத்துக்குடி மாணவர்கள் சாதனை: சாம்பியன்களுக்கு பாராட்டு விழா!
தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பதக்கங்களை வென்று தூத்துக்குடி மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்த மாணவர்களுக்குத் தூத்துக்குடி மாவட்ட ஷிட்டோ ரியூ கராத்தே சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
கே.சின்னத்துரை தங்க மாளிகையில் கிருஷ்ண ஜெயந்தி விழா : குழந்தைகளுக்குப் பரிசுகள் வழங்கல்!
தூத்துக்குடி தூத்துக்குடி 'கே.சின்னத்துரை தங்க மாளிகை' சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு, சிறுவர் சிறுமிகளுக்கான கிருஷ்ணர் மற்றும் ராதை மாறுவேடப் போட்டிகள் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றன.
சாலையோர வியாபாரிகளுக்குக் கடனுதவி சிறப்பு முகாம்: பிஎம் ஸ்வாநிதி திட்டத்தின் பயன்பெற அழைப்பு
தூத்துக்குடியில், அனைத்து சாலையோர வியாபாரிகளும் கடன் வழங்க சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என்று மாநகராட்சி ஆணையர் சி. ப்ரியங்கா தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் மீது அடக்குமுறையா? தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க. கண்டனம்!
பாசனத்திற்குத் தண்ணீர் திறக்கக் கோரி மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டதற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும்: கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்
விவசாயிகளின் கோரிக்கையை உடனடியாக ஏற்று, பாபநாசம் அணையிலிருந்து 1,500 கனஅடி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று கனிமொழி எம்பி வலியுறுத்தியுள்ளார்.
செய்தித்தாள் விநியோகிப்பாளர்கள் தின விழா: மழைக்கோட் வழங்கிய ரோட்டரி சங்கம்!
கோவில்பட்டியில், செய்தித்தாள் விநியோகிப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு, ரோட்டரி சங்கம் சார்பில் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் மழைக்கோட்டுகள் வழங்கப்பட்டன.
வ.உ.சி. 155-வது பிறந்த நாள்: தூத்துக்குடியில் தொழிலாளர் போராட்ட நினைவுச்சின்னம் அமைக்கக் கோரிக்கை!
இந்தியாவில் நடந்த முதல் தொழிலாளர் போராட்டம் நடைபெற்ற தூத்துக்குடி கோரல் மில் பகுதியில் நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ண ஜெயந்தி விழா: நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம்!
விளாத்திகுளம் அருகே கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் சுவாமிக்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம் சென்றனர்..
விளாத்திகுளம் ஸ்ரீ அம்பாள் வித்யாலயா பள்ளியில் 13-ஆம் ஆண்டு விழா!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் உள்ள ஸ்ரீ அம்பாள் வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியின் 13-ஆம் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
நாசரேத் புனித லூக்கா சமுதாய கல்லூரியில் புதிய ஆய்வகம் திறப்பு விழா
நாசரேத் புனித லூக்கா சமுதாயக் கல்லூரியில் புதிய ஆய்வகம் திறப்பு விழா நடைபெற்றது.
தாமிரபரணி நீர் கோரி விவசாயிகள் திடீர் சாலை மறியல் போராட்டம் - தூத்துக்குடியில் பரபரப்பு!
கடைமடை பாசனத்திற்கு முழுமையான அளவில் தண்ணீர் திறக்கக் கோரி தூத்துக்குடியில் மாட்டு வண்டி, டிராக்டர்களுடன் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
