விழாவிற்கு புனித லூக்கா சமுதாய கல்லூரி இயக்குநர் ரத்னகுமார் தலைமை தாங்கி பேசினார். கல்லூரி தாளாளர் செல்வின் ஜெபக்குமார் அனைவரையும் வரவேற்றார். நாசரேத் பேராலய உதவி குருவானவர் தனசேகர் ராஜா ஜெபம் செய்தார். சென்னை சுகம் மருத்துவ மனைகளின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஷீலா சத்தியகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆய்வகத்தை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.
விழாவில் தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல பெருமன்ற உறுப்பினர் ராஜாசிங், திருமறையூர் கனோன் தாமஸ் சித்தர் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளித் தாளாளர் டேவின் சாலமோன், கல்லூரி ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் தனபால், பிராங்கிளின், ஜோஸ்பெல், ரமேஷ், நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி பேராசிரியர் பிரவின் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக சமுதாய கல்லூரி பொறுப்பு முதல்வர் கிறிஸ்டினால் நன்றி கூறினார்.

