தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களுக்கும் அமைதிக்கும் பங்கம் விளைவித்து வந்த வரலாற்றுப் பதிவேடு ரவுடிகளான 3 நபர்களைக் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பரிந்துரை செய்தார்.
அதனடிப்படையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் நியூ முனியசாமிபுரம், தாளமுத்துநகர் மாரிமுத்து மகன் சிவா என்ற ஜீவா (20), அம்பேத்கர் நகர் 1-வது தெரு, சேகர் மகன் சந்திரன் (23), அம்பேத்கர் நகர் 4-வது தெரு, வெள்ளைப்பாண்டி மகன் சந்தனராஜ் என்ற பம்பு (25) ஆகிய 3பேரையும் சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் தனசேகரன் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
தூத்துக்குடி நகரில் சட்டம்-ஒழுங்கைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படும் நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை தொடரும் எனக் காவல் துறை எச்சரித்துள்ளது.

