தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் தனியார் பங்களிப்புடன் போக்குவரத்து நெரிசலும் மாசுபாடும் இல்லாத தூத்துக்குடி மற்றும் தூய்மையான குப்பைகளை முறையாக பிரித்து சேகரிப்போம் என்று தலைப்புகளில் மாநகராட்சிக்குட்பட்ட ராஜகோபால்நகர் பூங்காவில் நடைபெற்ற விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு பேசுகையில் "கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மாநகராட்சி பகுதி எப்படி இருந்தது. இப்போது நான்கரை ஆண்டுகாலம் எப்படி வளர்ந்துள்ளது.

அடுத்து இன்னும் 15 ஆண்டுகளுக்கு பின்பு 2040ல் தூத்துக்குடி மாநகராட்சி எப்படி இருக்க வேண்டும் என்று முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறோம். வின்பாஸ்ட் தொழிற்சாலை உள்ளிட்ட பல தொழிற்சாலைகள் இருந்தாலும் இன்னும் பல வந்து கொண்டிருக்கின்றன. அதற்கேற்றாற் போல் கட்டமைப்புகளை நாமும் உருவாக்க வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டத்தை தொட்டுதான் இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சுமார் 800 வாகனங்கள் சென்று கொண்டிருக்கின்றன. குப்பைகளை இரு வகையாக தரம்பிரித்து வீடுகள்தோறும் சேகரித்து வந்த நிலை இருந்தது தற்போது பல தொழில்நுட்பங்களும் வளர்ந்து வருகின்ற காலத்திற்கேற்ப மின்சாரம் சார்ந்த கழிவு பொருட்கள் உள்ளிட்ட பல வகைகள் உருவாகி வருவதால் 4 வகையாக இப்போது அனைவரும் பிரித்து கொடுக்க வேண்டும் என்று பேசினார்

பின்னர் ஆணையர் ப்ரியங்கா முன்னிலையில், பள்ளி மாணவ மாணவியர்களுக்கான ஓவியப்போட்டியை மேயர் துவக்கி வைத்தார். விழாவில் சுகாதார அலுலவர்கள் ராஜசேகர், ஹரிகணேஷ், ராஜபாண்டி, சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், கவுன்சிலர்கள் பொன்னப்பன், சந்திரபோஸ், கனகராஜ், கந்தசாமி, ஜான், பகுதி செயலாளர் ரவீந்திரன், வட்டச்செயலாளர் ரவீந்திரன், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரை மணி, மேயரின்நேர்முக உதவியாளர் ரமேஷ், உள்பட அரசுத்துறை அலுவலர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.