கிருஷ்ண ஜெயந்தி விழாவைக் கொண்டாடும் வகையில், தூத்துக்குடி கே.சின்னத்துரை தங்க மாளிகையில் இன்று சிறப்புக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இப்போட்டிகளில் 1 வயது முதல் 10 வயது வரையிலான ஏராளமான சிறுவர், சிறுமிகள் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். இதுபோல் திருநெல்வேலி, திருச்செந்தூர் மற்றும் ஏரல் ஆகிய கிளைகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது.

இதில், குழந்தைகள் பலரும் கிருஷ்ணர் மற்றும் ராதை போன்று வண்ணமயமான ஆடைகள், புல்லாங்குழல் மற்றும் கிரீடங்கள் அணிந்து மாறுவேடத்தில் வருகை தந்து காண்போரைக் கவர்ந்தனர். போட்டியில் பங்கேற்று மாறுவேடத்தில் வருகை தந்த அனைத்துக் குழந்தைகளுக்கும் சின்னத்துரை தங்க மாளிகை நிர்வாகத்தின் சார்பில் சிறப்புப் பரிசுகள் வழங்கிப் பாராட்டப்பட்டது.

KrishKc.jpg

விழாவில் பங்கேற்ற குழந்தைகளின் பெற்றோர்கள் கூறுகையில், குழந்தைகளின் கலைத் திறனை ஊக்குவிக்கும் வகையிலும், பாரம்பரிய விழாக்களின் பெருமையை உணர்த்தும் வகையிலும் இந்த நிகழ்வை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த கே.சின்னத்துரை தங்க மாளிகை நிர்வாகத்திற்குத் தங்களது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.