கர்நாடக மாநிலம் மைசூருவில் கடந்த ஜூலை 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் 29-வது அகில இந்திய ஷிட்டோ ரியூ கராத்தே சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் பல பிரிவுகளில் போட்டியிட்டுத் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.
இம்மாபெரும் வெற்றியைக் கொண்டாடும் வகையில், தூத்துக்குடி மாஸ்டர் ஆர்.கே. பறக்கும் படை அகாடமியில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்குத் தூத்துக்குடி மாவட்ட ஷிட்டோ ரியூ கராத்தே சங்க செயலாளரும், அகாடமியின் நிறுவனருமான மாஸ்டர் இ. ரத்னகுமார் தலைமை தாங்கினார்.
தேசியப் போட்டியில் வெற்றி பெற்ற சுஜன் குமார், ஹரி நாகராஜ், ரித்வின் கற்குவேல், மாரி முத்து மணிஷ், சாதனா, முத்துலட்சுமணன், ஏஞ்சல், விஷ்வ தேவ், சேராஃபின், சித்தார்த், பிரணவ், ஹல்லன் ரூஃபஸ், சக்தி வடிவேல் முருகன், வர்ஷர் மற்றும் செல்வா உள்ளிட்ட மாணவர்களுக்கு நினைவுப் பரிசுகள், பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டப்பட்டது.
மாணவர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளித்த மாஸ்டர் ஆனந்த், மாஸ்டர் சரவணகுமார், மாஸ்டர் சுபாஷ் விஷ்ணுகுமார் மற்றும் மாஸ்டர் ராஜேஷ் ஆகிய பயிற்சியாளர்களுக்கும், மாணவர்களை ஒருங்கிணைத்துச் வழிநடத்திய மாஸ்டர் இ. ரத்னகுமார் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய மாஸ்டர் ரத்னகுமார், "எங்கள் மாணவர்கள் தேசிய அளவில் சாதனை படைத்துத் தூத்துக்குடிக்குப் பெருமை சேர்த்துள்ளனர். எதிர்காலத்தில் சர்வதேசப் போட்டிகளிலும் இவர்கள் நாட்டிற்குப் பெருமை சேர்ப்பார்கள்" என நம்பிக்கை தெரிவித்தார்.
இவ்விழாவில் பெற்றோர்கள், கராத்தே பயிற்சியாளர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தினர்.

