செய்திகள்

நாலுமாவடி புதுவாழ்வு சங்கம் சார்பில் செட்டிக்குளம் தூர்வாரும் பணி துவக்கம்

நாலுமாவடி புதுவாழ்வு சங்கம் சார்பில் புனைசெட்டிக்குளம் தூர்வாரும் பணியை இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி லாரசஸ் துவங்கி வைத்தார்.

வன்கொடுமைத் தடுப்புச் சட்ட விழிப்புமுறைக் கூட்டம்: ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது!

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் நலன் மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டங்கள் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகம் பசுமை மாற்றத்தின் முதன்மை மையம்: ஐசிசிடி கொள்கை அறிக்கை வெளியீடு!

புதுடெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகம் பசுமை மாற்றத்தின் முதன்மை மையம் என்ற ஐசிசிடி கொள்கை அறிக்கை வெளியிடப்பட்டது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரம்: த.வெ.க அரசுக்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு வலியுறுத்தல்!

தமிழகத்தை தற்போது ஆளும் த.வெ.க. அரசு, கடந்த கால அதிமுக, திமுக அரசுகள் செய்த அதே தவறுகளைத் திரும்பச் செய்துவிடக் கூடாது என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

திருச்செந்தூர் வட்டத்தில் அரசுத் திட்டப் பணிகள்: ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் ஆய்வு!

திருச்செந்தூர் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க சிறப்புச் சலுகை : தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தகவல்!

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க அரசு வழங்கியுள்ள சிறப்புச் சலுகையைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி நாமத்வாரில் ஸ்ரீ ராதா கிருஷ்ணன் திருக்கல்யாண வைபவம் கோலாகலம்!

தூத்துக்குடியில் உள்ள நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் கிருஷ்ண ஜெயந்தி பெருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ ராதா கிருஷ்ணன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது.

சட்டப்பேரவை மீன்வளத்துறை மானியக் கோரிக்கை : 24 புதிய திட்டங்களை அமைச்சர் ஸ்ரீநாத் அறிவிப்பு!

சட்டப்பேரவையில் மீன்வளத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் கட்டமைப்பு மேம்பாடுகள் குறித்த 24 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுப் பேசினார்.

அரசுப் பேருந்து தீப்பிடித்து எரிந்து சாம்பல்: 50 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்!

சங்கரன்கோவிலில் இன்று காலை அரசுப் பேருந்து ஒன்று திடீரெனத் தீப்பிடித்து முழுவதுமாக எரிந்து சாம்பலான நிலையில், ஓட்டுநரின் சமயோசிதமான செயல்பாட்டால் பேருந்திலிருந்த 50 பயணிகள் எவ்விதக் காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

நியாய விலைக்கடைகள் மூலம் வெங்காயம் விற்பனை : ஆட்சியர் ஆனந்த் மோகன் ஆய்வு

திருநெல்வேலி மாவட்டத்தில் நியாய விலைக்கடைகள் மூலம் வெங்காயம் விற்பனை நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நடு பழனி முருகன் கோவிலில் பல கோடி ரூபாய் மதிப்பிலான மரகதக் கல் சிலை கொள்ளை!

மதுராந்தகம் அருகே பல கோடி ரூபாய் மதிப்பிலான மரகதக் கல் மூலவர் சிலை திருடுபோனது குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

உலகின் அதிவேகப் பொருளாதார நாடு இந்தியா : நியூயார்க்கில் நிர்மலா சீதாராமன் உரை!

உலகின் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடாக இந்தியா தொடர்ந்து வீறுநடை போடுகிறது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.