தூத்துக்குடி குமாரர் தெருவைச் சேர்ந்தவர் துரைசிங்கம். இவரது மகன் விக்னேஷ் (22), தொழிலாளி. இவர் தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியில் உள்ள ஒரு அட்டை கம்பெனியில் வேலை செய்து வந்தார். நேற்று மாலை வழக்கம்போல பணியில் ஈடுபட்டிருந்தபோது, எந்திரத்துக்குள் அட்டை சிக்கிக் கொண்டது.

அதனை அகற்றுவதற்காக விக்னேஷ் தனது தலையை எந்திரத்தின் உள்ளே நுழைத்து முயற்சி செய்துள்ளார். எதிர்பாராதவிதமாக அந்த நேரத்தில் எந்திரம் இயங்கியதால், அவரது உடல் உள்ளே இழுக்கப்பட்டு தலை நசுங்கியது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து தென்பாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.