உலக இதய தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி அருணா கார்டியாக் கேர் மருத்துவமனை சார்பில், சிறந்த ஆசிரியர்களுக்கான விருது வழங்கும் விழா புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள கேர் மருத்துவமனை கலையரங்கத்தில் நடைபெற்றது.

நிகழ்வில் வாகைக்குளம் ஹோலி கிராஸ் பொறியியல் கல்லூரி முதல்வர் வரத விஜயன் மற்றும் மாவட்ட அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் சிவகாம செல்வி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு சிறந்த முறையில் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தனர்.

இவ்விழாவில் அருணா கார்டியாக் கேர் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் ஸ்வர்ண லதா அருணாச்சலம், மருத்துவமனை முதன்மைச் செயல் அலுவலர் ராமன், தாமிரவருணி தமிழ் வனம் அமைப்பின் தலைவர் ஏ.ஆர். லெட்சுமணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.