தூத்துக்குடியில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான அலுவலகத்தில் கொடிய விஷம் கொண்ட சுருட்டை விரியன் பாம்பு ஒன்று பிடிபட்டது.

தூத்துக்குடி 2-ஆவது கேட் அருகில் உள்ள இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான அலுவலக வளாகத்தில் பாம்பு ஒன்று இருப்பதாகத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, தூத்துக்குடி தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலர் கோமதி அமுதா தலைமையில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் குழுவினர் விரைந்து சென்றனர்.

அலுவலகத்தில் புகுந்த சுருட்டை விரியன் பாம்பைத் தீயணைப்புப் பணியாளர்கள் பாதுகாப்பாகப் பிடித்து, பின்னர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.