இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் 2,095 பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 31.08.2026 முதல் 19.09.2026 வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணி நிறுவனம்: தமிழ்நாடு அஞ்சல் துறை

காலியிடங்கள்: 2,095

பதவியின் பெயர்: கிராமின் தாக் சேவக் (GDS)

கல்வித்தகுதி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு வரை உள்ளூர் மொழியைப் (தமிழ்) படித்திருப்பதுடன், கணினி அறிவு மற்றும் சைக்கிள் ஓட்டும் திறனும் அவசியம்.

வயது வரம்பு: 21.09.2026 அன்றைய நிலவரப்படி 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். (அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு).

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு எதுவும் கிடையாது. பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் (Merit List) தகுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பிற்குப் பின் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 31.08.2026 முதல் 19.09.2026 வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்ய 23.09.2026 மற்றும் 24.09.2026 ஆகிய தேதிகளில் அவகாசம் வழங்கப்படும்.

கூடுதல் விவரங்கள் மற்றும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க https://indiapost.gov.in/gdsonlineengagement என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம்.