அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தைச் சேர்ந்த கிறிஸ்டா பைக் என்ற பெண், கடந்த 1995-ஆம் ஆண்டு சக மாணவி ஒருவரைக் கொடூரமாகக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது.
சிறையில் அடைக்கப்பட்டிருந்த கிறிஸ்டா பைக்-க்கு மரண தண்டனையை நிறைவேற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர். இதன்படி, அவரைத் தனி அறைக்குக் கொண்டு வந்த சிறைத்துறை அதிகாரிகள், உடலில் விஷ ஊசியைச் செலுத்தினர். பொதுவாக விஷ ஊசி போட்ட சில நிமிடங்களில் உயிர் பிரிந்துவிடும்.
ஆனால், முதல் முறை விஷ ஊசி செலுத்தப்பட்ட பிறகும் அவர் இறக்கவில்லை; தொடர்ந்து மூச்சு விட்டுக்கொண்டே இருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், சிறிது நேரம் கழித்து 2-வது முறையாக மீண்டும் விஷ ஊசி செலுத்தினர். ஆனால், 40 நிமிடங்களுக்கு மேலாகியும் அவர் குரட்டை விட்டுத் தூங்குவது போல் உயிருடன் இருந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், உடனடியாகத் தண்டனை நிறைவேற்றுவதை நிறுத்தி வைத்தனர். பின்னர், அவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுச் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த வழக்கத்திற்கு மாறான சம்பவத்தைத் தொடர்ந்து, டென்னசி மாநில ஆளுநர் பில் மாநிலத்தில் தண்டனையை நிறைவேற்றும் முறைகள் குறித்து விசாரணை நடத்தவும், இந்த ஆண்டு இறுதி வரை அனைத்து மரண தண்டனைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

