தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு இந்து முன்னணி கட்சி சார்பில் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் வடக்கு மாவட்டத் தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்து வழக்கறிஞர் முன்னணி மாவட்டத் தலைவர் சந்தனகுமார் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் கிருஷ்ணன் மற்றும் நெல்லை கோட்டத் தலைவர் தங்க மனோகர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு கண்டனச் சிறப்புரையாற்றினர். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் 200-க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

