இந்திய அரசியலமைப்புச் சட்ட தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் முன்பு அமைந்துள்ள சட்டமேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் திருவுருவச் சிலைக்குத் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக துணைத் தலைவர் வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தலைமையில் திரண்ட நிர்வாகிகள், டாக்டர் அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்பைப் பாதுகாக்கும் வகையில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் விவேகம் ரமேஷ், மாவட்டப் பொதுச் செயலாளர் ஏ.எம். ராஜேஷ், மாவட்டத் துணைத் தலைவர்கள் காளிராஜா, இசக்கிமுத்து, மாசாணம் தங்கம், மாவட்ட மருத்துவ அணித் தலைவர் தென்றல் பாலாஜி, மாவட்ட ஓ.பி.சி. அணிப் பொதுச் செயலாளர் வன்னியராஜ், மாவட்ட மகளிர் அணித் தலைவி வெள்ளத்தாய், மாவட்டச் செயலாளர் செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், ஆன்மீகப் பிரிவு மாவட்டத் தலைவர் ஓம் பிரபு, துணைத் தலைவர் உஷாதேவி, பிரச்சாரப் பிரிவு மாவட்டத் தலைவர் சொக்கலிங்கம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜா, மண்டலத் தலைவர்கள் சண்முகசுந்தரம், லிங்கச்செல்வம் மற்றும் மண்டலப் பொதுச் செயலாளர்கள் ஜெயரூபி, வேல்கனி, ராமர் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.