தூத்துக்குடி தெரஸ்புரம் பகுதியைச் சேர்ந்த பாலு மகன் பிச்சையா (43). இவர் தூத்துக்குடி தெர்மல் நகர் அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக ஃபிட்டர் பணி செய்து வந்தார். நேற்று வழக்கம்போல் பணிக்கு வந்த பிச்சையா, மாலை நேரத்தில் அனல்மின் நிலையத்தின் இரண்டாவது கிரஷர் கன்வேயர் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாகத் தவறி கீழே விழுந்துள்ளார்.

இதில் பலத்த காயம் அடந்த அவர் உடனடியாக மீட்கப்பட்ட பிச்சையா, தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தெர்மல் நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.