தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அரியநாயகிபுரம் கிராமத்தில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் 2026-27-ஆம் ஆண்டிற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு தோட்டக்கலைத் திட்டப் பணிகளைத் துணை இயக்குநர் சுபாவாசுகி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து விவசாயிகளிடம் பேசிய அவர், அரசின் நலத்திட்டங்களைப் பெறுவதற்கு உழவர் பதிவேடு (Farmer Registry) மற்றும் மின்னணுப் பயிர் கணக்கெடுப்பு (Digital Crop Survey) ஆகியவற்றின் அவசியம் குறித்து எடுத்துரைத்தார். மேலும், வறட்சிக் காலங்களில் தோட்டக்கலைப் பயிர்களைப் பாதுகாத்துப் பராமரிக்கும் தொழில்நுட்ப முறைகள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கமளித்தார்.

ஆய்வின்போது தோட்டக்கலை உதவி இயக்குநர் சிவகுமார், தோட்டக்கலை அலுவலர் லோகேஷ், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் முகிலா, சரத்குமார் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர்.