தூத்துக்குடி மற்றும் அதன் கடலோரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கடலுக்குள் அதிக அளவு மழை பெய்து வருவதால் மீன்பிடித் தொழிலுக்கு உகந்த சூழல் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு, தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லாமல் தவிர்த்துள்ளனர். இதன் காரணமாகத் துறைமுகத்தில் விசைப்படகுகள் அனைத்தும் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

