தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தின் பின்புறம் உள்ள தெருவில் வசித்து வருபவர் தம்யான் மகன் ராகுல் (30). இவர் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினராக உள்ளார். இவர் தனது வீட்டின் முன்பு கார் ஒன்றை நிறுத்தி வைத்திருந்தார்.
இந்நிலையில், நேற்று நள்ளிரவில் மர்ம நபர்கள், வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் கண்ணாடிகளை உடைத்தும், காரில் கட்டப்பட்டிருந்த தவெக கொடியைச் சேதப்படுத்தியும் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மறுநாள் காலையில் காரின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ராகுல் மற்றும் குடும்பத்தினர் இது குறித்துப் புகார் அளித்தனர். இதனடிப்படையில், நள்ளிரவில் தெருவிற்குள் நுழைந்து காரைச் சேதப்படுத்திய மர்ம நபர்கள் குறித்துத் தென்பாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

