தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கீழஈரால் பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கீழஈரால் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் சாலைப் பணிகளையும், மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்று வரும் உயர்மட்டப் பாலம் அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டார். அப்போது பணிகளின் தரம் குறித்தும், திட்டப் பணிகளைச் விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவது குறித்தும் துறை சார்ந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்து ஆலோசனைகளை வழங்கினார்.

ஆய்வின் போது விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி கிழக்கு ஒன்றியச் செயலாளர் நவநீத கண்ணன், விளாத்திகுளம் தெற்கு ஒன்றியச் செயலாளர் இம்மானுவேல், ஒன்றியத் துணைச் செயலாளர் ஜெயமுத்து, மாவட்டப் பிரதிநிதி சக்திவேல் கனி, கிளைச் செயலாளர்கள் சண்முகவேல், மாடசாமி, சேகர், மகளிரணி பத்மா உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.