திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதை வரவேற்று, தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பழைய பேருந்து நிலையம் முன்பு மாநில செயற்குழு உறுப்பினர் விவேகம் ரமேஷ் தலைமையில் திரண்ட பாஜக நிர்வாகிகள், பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து, அருகிலுள்ள விநாயகர் கோவிலில் தேங்காய் உடைத்துச் சிறப்பு பூஜை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி அண்ணா நகர் மூன்றாவது தெரு மற்றும் சிவன் கோவில் அருகே பாஜகவினர் பட்டாசுகள் வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கித் தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சிகளில் மாவட்டப் பொதுச் செயலாளர் ராஜேஷ், மாவட்டச் செயலாளர் செல்வி, மாவட்டத் துணைத் தலைவர்கள் சிவராமன், காளிராஜா, இசக்கிமுத்து, மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் வெள்ளகாய், அண்ணராஜ், மாநகர இந்து முன்னணித் தலைவர் இசக்கி முத்துக்குமார், மண்டலத் தலைவர்கள் சண்முகசுந்தரம், செல்வகுமார், ஓ.பி.சி. அணி மாவட்டப் பொதுச் செயலாளர் வன்னியராஜ், ஆன்மீகப் பிரிவுச் செயலாளர் ஓம் பிரபு, ஆன்மீகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஐயப்பன், நிர்வாகிகள் வெங்கடேஷ், இசக்கி துரை, ஐயப்பன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.