திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் இடைக்கால ஏற்பாடாகக் கார்த்திகை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததை வரவேற்று, தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் முன்பு இந்து வழக்கறிஞர் முன்னணி மற்றும் பாஜக வழக்கறிஞர் அணியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் இடைக்கால ஏற்பாடாகத் தீபம் ஏற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை வரவேற்கும் விதமாக, தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு திரண்ட வழக்கறிஞர்கள் மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றுப் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்நிகழ்வில் கூடுதல் மத்திய அரசு வழக்கறிஞர் இசக்கி லட்சுமி, பாஜக வழக்கறிஞர்கள் நாகராஜன், தங்கரதி, சதீஷ்குமார், பிரேம்குமார் மற்றும் இந்து முன்னணி மாநகர மாவட்டத் தலைவர் இசக்கி முத்துக்குமார், மாவட்டச் செயலாளர் சரவணகுமார், ஐயப்பன், பாஜக ஆன்மீகப் பிரிவு பாலமுருகன், வடக்கு மண்டலத் தலைவர் வரதராஜ பெருமாள், மேற்கு மண்டல நிர்வாகிகள் மற்றும் இந்து முன்னணி ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.