விளாத்திகுளம் அருகே குட்டையில் மூழ்கி 7 வயது பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள வி. வேடப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கொம்பு ராஜ். இவரது மகன் முகுந்தனர் (7), விளாத்திகுளத்தில் உள்ள தனியார் பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த பின்னர், தனது சைக்கிளில் விருசம்பட்டி சாலையில் விவசாயப் பயன்பாட்டிற்காகத் தோண்டப்பட்டிருந்த குட்டைக்குக் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக வழுக்கி குட்டைக்குள் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விளாத்திகுளம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

