தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொழில்பேட்டை அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த ஆட்டோவைச் சோதனையிட்டபோது, அதில் விற்பனைக்காகத் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

இது தொடர்பாகக் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. மாரியப்பன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், அவர் கோவில்பட்டி லிங்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி மகன் முருகராஜ் (24) என்பது தெரியவந்தது.

இதையடுத்து முருகராஜைக் கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 37 கிலோ 500 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.