» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

பி.எம்.சி. பள்ளியில் மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த நாள் விழா

செவ்வாய் 10, டிசம்பர் 2024 8:54:34 PM (IST)



தூத்துக்குடி பி.எம்.சி. பள்ளியில் மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது

பள்ளிக்கல்வித்துறையின் வழிகாட்டும் நெறிமுறைகளின் படி மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் இந்திய மொழிகள் உற்சவம் டிசம்பர் 5 அன்று பி.எம்.சி பதின்ம மேல்நிலைப் பள்ளிகளின் முதல்வர் கோ. பால்கனி வழிகாட்டுதலின்படி வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் பி.எம்.சி பள்ளி மாணவர்கள் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு, மாநிலங்களின் கலாச்சார பாரம்பரிய உணவு முறைகள் பற்றிய கலந்துரையாடல், ஓவியம் மற்றும் முழக்கங்கள் தயாரித்தல், பாரதியார் வாழ்க்கை வரலாறு குறித்த நாடகங்கள், கதை கூறுதல் மற்றும் கருத்துப்பட்டறை போன்ற நிகழ்வுகளில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory