» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி
வியாழன் 5, டிசம்பர் 2024 8:12:50 PM (IST)
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு மழைக்கால நோய் தடுப்பு மருந்துகளில் ஒன்றான நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
தலைமையாசிரியர் குணசீலராஜ் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். உதவி தலைமை ஆசிரியர் சார்லஸ் திரவியம், தென்திருப்பேரை அரசு ஆரம்ப சுகாதார நிலைய பள்ளி சிறார் குழு மருத்துவர் பத்ரி ஸ்ரீநிவாஸ் மற்றும் உடையார்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆயுஷ் சமுதாய நல அலுவலர் மருத்துவர் ஸ்ரீதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தென்திருப்பேரை அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் சங்கரேஸ்வரி, உடையார்குளம் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் ரேவதி, அபிலா, பல்நோக்கு பணியாளர் முத்துலட்சுமி, பெண் சுகாதார தன்னார்வலர்கள் ராஜேஸ்வரி மற்றும் முத்துலஷ்மி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் சுதாகர் தலைமையில், உடற்கல்வி ஆசிரியர் தனபால், இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ், தேசிய மாணவர் படை அலுவலர் சுஜித் செல்வசுந்தர் பிற ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் செய்திருந்தனர்.