» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூத்துக்குடி கிரேஸ் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம்
செவ்வாய் 3, செப்டம்பர் 2024 8:05:01 AM (IST)
தூத்துக்குடி கிரேஸ் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது.
கல்லூரி செயலர் பெட்ரோ ஜோஷுவா ஆரம்ப ஜெபம் செய்து விழாவை தொடக்கி வைத்தார். அதனை தொடர்ந்து தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது. பின்னர் இயற்பியல் துறை பேராசிரியை ஜினி கமல் ஈஸ்ட்ரோ அனைவரையும் வரவேற்று பேசினார்.
கல்லூரியின் தலைவர் சி.எம்.ஜோஸ்வா, துணைத் தலைவர் ஸ்டீபன் தலைமை வகித்து பேசினார்கள். சிறப்பு விருந்தினரான தமிழ்நாடு உற்பத்தி மற்றும் விநியோக கழகம் தலைமை பொறியாளர் (ஓய்வு), இ.டேவிட் ஜெபசிங், தங்களது உரையில் ஒழுக்கம், உண்மை, ஊக்கம், முயற்சி ஆகியவற்றை கடைபிடிக்கும் போது எளிதில் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்று மாணவர்களுக்கு சிறப்பாக உரையாற்றினார்.
அதனைதொடர்ந்து கல்லூரியின் முதல்வர் டாக்டர்.எஸ். ரிச்சர்ட் கல்லூரியின் விதிமுறைகளை மாணவ மாணவியருக்கு கூறினார். பின்னர் முன்னாள் மாணவர்கள் தங்கள் வெற்றியின் அனுபவத்தை முதலாம் ஆண்டு மாணவ மாணவியர்களுக்கு பகிர்ந்து கொண்டனர். துறை தலைவர் ஆண்டனி ரெக்ஸ் மற்றும் சிவகுமார் முதலாம் ஆண்டு பேராசிரியர்களை அறிமுகப்படுத்தினார்கள்.
கல்லூரியில் சேர்ந்துள்ள மாணவர்களில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. கணிதத் துறை பேராசிரியர் ஜி. விக்டர் இம்மானுவேல் நன்றி கூறினார். நிகழ்ச்சியை ஆங்கிலத்துறை பேராசிரியர்கள் மற்றும் மேலாண்மை மாணவிகள் தொகுத்து வழங்கினர். ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாக அதிகாரி தினகரன் மற்றும் அறிவியல் மற்றும் மனித நேயத்துறையினர் செய்திருந்தனர்.