» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

மண்டல போட்டிகள்: நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகள் முதலிடம்!

வெள்ளி 16, ஆகஸ்ட் 2024 4:24:41 PM (IST)



பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையேயான மண்டல போட்டிகளில் நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகள் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
    
நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் 78வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன் வரவேற்புரை நிகழ்த்தினார்.  கல்லூரியின் தாளாளர் மற்றும் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல லே செயலர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் கலந்து கொண்டு சுதந்திரதின உரை நிகழ்த்தினார். 

ஆட்டோ மொபைல் துறை தலைவர் ஜாண் வெஸ்லி உறுதிமொழி வாசித்தார்.  கணினி துறை இறுதி ஆண்டு மாணவி விஜயசாந்தி மற்றும் எந்திரவியல் துறை மாணவர்  முத்துபழனி ஆகியோர் சுதந்திரம்  குறித்து பேசினர்.மண்டல அளவில் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டிகளில் த்ரோ பால் போட்டியில் முதல் பரிசு மற்றும் செஸ் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக்  மாணவியர்களுக்கு பரிசுகள் வழங் கப்பட்டது.மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

முடிவில் கல்லூரி பர்சர் தனபால் நன்றி கூறினார். நிகழ்ச்சியை ஆசிரியர் வெலிங்டன் தொகுத்து வழங்கினார். விழாவில் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.  இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் தாளாளரும், திருமண்டல லே செயலருமான நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் தலைமையில் முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன், பர்சார்  தனபால், உடற்கல்வி இயக்குனர் விமல் சுதாகர், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் லிவிங்ஸ்டன் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory