» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூத்துக்குடி சக்தி வித்யாலயா பள்ளியில் 78வது சுதந்திர தினவிழா

வியாழன் 15, ஆகஸ்ட் 2024 4:25:58 PM (IST)



தூத்துக்குடி சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் 78வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. 

விழாவில் சக்தி வித்யாலயா பள்ளியின் முதல்வர் ஆ.ஜெயாசண்முகம் முன்னிலையில் லயன் ஜீவா ரத்தினம் தலைமையில் டாக்டர் பாலசங்கரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மாணவ, மாணவியரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். 

அதன்பின் மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள், சொற்பொழிவு ஆகியவை நடைபெற்றது. அதன்பின் அன்னை தெரசாவின் பிறந்தநாள் விழாவினையும் நடத்தினர். அன்னை தெரசாவின் வேடமணிந்து மாணவி உரையாற்றினார். முன்னதாக ஆசிரியை கிங்ஸ்லின் சோபியா வரவேற்று பேசினார். நிறைவாக ஆசிரியை ஜெபமாலை நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை துணை முதல்வர் ரா.ச.பிரியங்கா மற்றும் ஆசிரியைகள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஸ்பிக் நகர் பள்ளியில் பெற்றோர் தினவிழா!

திங்கள் 2, செப்டம்பர் 2024 3:16:46 PM (IST)


Sponsored Ads





Thoothukudi Business Directory