» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் இளையோர் செஞ்சிலுவை சங்க துவக்க விழா!

செவ்வாய் 13, ஆகஸ்ட் 2024 4:48:50 PM (IST)



நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் இளையோர் செஞ்சிலுவை  சங்க துவக்க விழா நடைபெற்றது.

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் கல்வி இணைச் செயல்பாடுகள் மாணவர்களுக்கு  நடைமுறைப்ப டுத்தப்பட்டு  வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, இளையோர் செஞ்சிலுவை சங்கத்தின் துவக்க விழா நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் குணசீலராஜ் தலைமை வகித்து இளையோர் செஞ்சிலுவை சங்கத்தினை துவக்கி வைத்தார்.

உதவி தலைமை யாசிரியர் சார்லஸ் திரவியம் முன்னிலை வகித்தார்.இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் அனைவரையும் வரவேற்றார். இளையோர் செஞ்சிலுவை சங்க பொறுப்பாசிரியர் ஜென்னிங்ஸ் காமராஜ்  மாணவர்களுக்கு இளையோர் செஞ்சிலுவை சங்கத்தின் தோற்றம், வரலாறு,  அதன் பணிகள், மூன்று முக்கிய கொள்கைகள் மற்றும்  பிற சிறப்பம்சங்கள் குறித்தும் விளக்கி கூறினார். 

நிகழ்ச்சியில்  உடற்கல்வி இயக்குனர் பெலின் பாஸ்கர், என்சிசி அலுவலர் சுஜித் செல்வசுந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளையோர் செஞ்சிலுவை சங்க மாணவர்களையும், பொறுப்பாசிரியரையும் தாளாளர் சுதாகர், பிற ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பாராட்டினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஸ்பிக் நகர் பள்ளியில் பெற்றோர் தினவிழா!

திங்கள் 2, செப்டம்பர் 2024 3:16:46 PM (IST)


Sponsored Ads





Thoothukudi Business Directory