» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் சாலமோன் பள்ளியில் போதை ஒழிப்பு உறுதிமொழி

திங்கள் 12, ஆகஸ்ட் 2024 4:07:19 PM (IST)



நாசரேத் சாலமோன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் போதை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. 

இந்நிகழ்விற்கு பள்ளி தாளாளர் ஜமீன் சாலமோன் தலைமை தாங்கினார். நாசரேத் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜன் தேசிய கொடி ஏற்றிவ நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். தலைiமை காவலர் சந்தனமாரி போதை பொருள் எதிர்ப்பு உறுதி மொழி எடுக்க, அதனை தொடர்ந்து மாணவர்களும, ஆசிரியர்களும் உறுதிமொழிஎடுத்தனர்.

பள்ளிதலைவர் எலிசபெத்பால்முன்னிலை வகித்தார். பள்ளி நிர்வாகி பியூலா சாலமோன்,பள்ளி முதல்வர் ஜான்சி கனகராஜ் மற்றும் பல ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.மாணவர்களு க்கிடையே விழிப்புணர்வு ஏற்படுத் தும் வகையில் போதைப்பொருள் எதிர்ப்பு பற்றி பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.  முடிவில் உதவி முதல்வர் மாரித்தங்கம் நன்றி கூறினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஸ்பிக் நகர் பள்ளியில் பெற்றோர் தினவிழா!

திங்கள் 2, செப்டம்பர் 2024 3:16:46 PM (IST)


Sponsored Ads





Thoothukudi Business Directory