» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூத்துக்குடி சக்தி வித்யாலயாவில் குருபூர்ணிமா
சனி 20, ஜூலை 2024 10:59:40 AM (IST)

தூத்துக்குடி சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் குரு பூர்ணிமா நிகழ்ச்சி நடைப்பெற்றது.
விழாவிற்கு தலைமை வகித்து பள்ளியின் முதல்வர் ஆ.ஜெயசண்முகம் பேசுகையில், குருபூர்ணிமா என்பது ஆடிமாத பௌர்ணமி நாளில் மகரிஷி வேத வியாசர் அவதரித்த நாள் என்றும், இவரே நான்கு வேதங்களையும் எழுதியவர் என்று கூறினார். தாய் தன் குழந்தையிடம் காட்டும் அன்பும், குரு தன் சிஷ்யனிடம் காட்டும் அக்கறையும் உலகில் மிகமிக உயர்வானது.
எனவே மாணவ, மாணவிகளாகிய நீங்கள் ஆசிரியர் கற்றுத்தரும் பாடங்களை கூர்மையாக உற்று நோக்கி, அதைப் பதிவாக்கினால் அதுவே அவனை வழிநடத்தும். எனவே ஆசிரியைகளுக்கு மரியாதை கொடுத்து, அவர்களின் வழிகாட்டுதல்களோடு வாழ்க்கையில் நம் இலட்சியத்தை அடைய உறுதி கொள்வோம் என்று வாழ்த்தி பேசினார்.
அதன்பின் மாணவ, மாணவிகள் பூக்களை சமர்ப்பித்து, ஆரத்தி எடுத்து ஆசிரியைகளை வணங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் ஆசிரியைகள் அனைவரும் பூத்தூவி மாணவ, மாணவிகளை வாழ்த்தினார்கள். இதற்கான ஏற்பாடுகளை துணைமுதல்வர் ரா.ச.பிரியங்கா செய்திருந்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டி அரசு பள்ளியில் நிழல் இல்லா நாள் செயல் விளக்கபயிற்சி
திங்கள் 7, ஏப்ரல் 2025 4:27:22 PM (IST)

தமிழ் மன்றத் தேர்வில் வெற்றி : மர்காஷிஸ் மாணவர்களுக்கு பாராட்டு விழா
வியாழன் 20, மார்ச் 2025 8:08:57 AM (IST)

தூத்துக்குடி மரியன்னைக் கல்லூரி சார்பில் பறவைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சனி 8, மார்ச் 2025 5:22:04 PM (IST)

நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் அறிவியல் மன்றவிழா : மாணவர்கள் அசத்தல்!
சனி 8, மார்ச் 2025 4:43:30 PM (IST)

தூத்துக்குடி திருச்சிலுவை ஆரம்பப் பள்ளியில் ஆண்டு விழா
ஞாயிறு 2, மார்ச் 2025 11:44:25 AM (IST)

கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
வெள்ளி 21, பிப்ரவரி 2025 3:18:31 PM (IST)
