» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தெற்கு கோனார் கோட்டை பள்ளியில் கல்வி வளர்ச்சி தின விழா
செவ்வாய் 16, ஜூலை 2024 4:54:30 PM (IST)

கோனார் கோட்டை தமிழ் பாப்திஸ்து துவக்கப்பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் ஒன்றியம் தெற்கு கோனார் கோட்டை தமிழ் பாப்திஸ்து துவக்கப்பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் இராஜையா தலைமை வகித்தார். கோவில்பட்டி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நிலைய அலுவலர் சுந்தரராஜ் கலந்துகொண்டு காமராஜர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து கலை இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்.
இதில் மாணவர்கள் காமராஜர் மாஸ்க் அணிந்து வந்தனர். மாணவிகளின்நடனம் நடந்தது. கோவில்பட்டி ஈகிள் புக் சென்டர் சார்பில் பென்சில்கள், இனிப்புகள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் இராஜையா, உதவி ஆசிரியை ஜெயராணி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டி அரசு பள்ளியில் நிழல் இல்லா நாள் செயல் விளக்கபயிற்சி
திங்கள் 7, ஏப்ரல் 2025 4:27:22 PM (IST)

தமிழ் மன்றத் தேர்வில் வெற்றி : மர்காஷிஸ் மாணவர்களுக்கு பாராட்டு விழா
வியாழன் 20, மார்ச் 2025 8:08:57 AM (IST)

தூத்துக்குடி மரியன்னைக் கல்லூரி சார்பில் பறவைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சனி 8, மார்ச் 2025 5:22:04 PM (IST)

நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் அறிவியல் மன்றவிழா : மாணவர்கள் அசத்தல்!
சனி 8, மார்ச் 2025 4:43:30 PM (IST)

தூத்துக்குடி திருச்சிலுவை ஆரம்பப் பள்ளியில் ஆண்டு விழா
ஞாயிறு 2, மார்ச் 2025 11:44:25 AM (IST)

கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
வெள்ளி 21, பிப்ரவரி 2025 3:18:31 PM (IST)
