» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் பகுதியில் காமராஜர் பிறந்த நாள் விழா!

திங்கள் 15, ஜூலை 2024 8:11:45 PM (IST)


நாசரேத் சால மோன் மெட்ரிக் மேல்நிலைப்பள் ளியில் காமராஜரின் 122-வது பிறந்த நாள் விழா கொண்டாடப் பட்டது.

விழாவிற்கு பள்ளி தாளாளர் ஜமீன் சாலமோன் தலைமை வகித் தார்.பள்ளி நிர்வாகி பியூலா சால மோன் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை மாணவ, மாணவிக ளுக்கு எடுத்துரைத்தார். பள்ளி தலைவர் எலிசபெத் வாழ்த்துரை வழங்கினார். பள்ளி முதல்வர் ஜான்சி கனகராஜ் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். பள்ளி குழந்தைகள் காமராஜரின் வேடமணிந்து வந்திருந்தனர். 

குழந்தைகளுக்கு பேச்சுப் போட்டி மற்றும் நடனப் போட்டி நடைபெற் றது. காமராஜரின் வாழ்க்கை வரலாறு குறித்து மாணவர்கள் நாடகமாக நடத்திக் காட்டினர். போட் டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. குழந்தை களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. பள்ளி முதல்வர் மாரிதங்கம் நன்றி கூறினார்.விழாஏற்பாடுகளைபள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

 நாசரேத் மணிநகர் தூய வளன் துவக்கப் பள்ளியில் பெருந்தலை வர் காமராஜர் 122-வது பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி தினமாக கொண்டாடப்பட்டது. பள் ளித் தாளாளரும், பிரகாசபுரம் பங்கு தந்தையுமான சலேட்ஜெரால்டு அடி களார் தலைமை வகித்தார். தலை மையாசிரியர் அருள் வரவேற்று பேசினார். அருட்சகோதரி ஆஞ்சலா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி னார். இராம்குமார் மாணவ,மாண விகளுக்கு இனிப்பு வழங்கினார். நிறைவாக உதவிஆசிரியை ஜோஸ் பின் நன்றி கூறினார்.

 
நாசரேத் மர்காஷிஸ்மேல்நிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமரா ஜர் 122 வது பிறந்த தினம் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட் டது.இடைநிலை ஆசிரியர் பட்டுரா ஜன் பிரார்த்தனை செய்தார். தலை மையாசிரியர் குணசீலராஜ் வரவே ற்று பேசினார். மாணவர் ஜெர்வின் கரேஸ்டன் பெருந்தலைவர் குறித்து உரையாற்றினார். திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவி யல் கல்லூரி பொருளியல் உதவி பேராசிரியர் மருதையாபாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பள்ளி தாளாளர் சுதாகர் பரிசுகள் வழங்கினார்.

விழாவில் மாணவர் கள் கவிதை, பாடல், நடனம், நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சி களை செய்து காட்டினர். முடிவில் தமிழாசிரியர் வின்ஸ்டன் ஜாஸ்வா நன்றி கூறினார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி தலைமை ஆசிரியர் சார்லஸ் திரவியம், உடற்கல்வி இயக்குனர் பெலின் பாஸ்கர், இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ், பட்டதாரி தமிழ் ஆசிரியர்கள் அம்புரோஸ், எட்வின், ஆபிரகாம் இமானுவேல், உடற்கல்வி ஆசிரியர்கள் தனபால், சுஜித் செல்வ சுந்தர் மற்றும் பிற ஆசிரியர்கள், ஆசிரியைகள் செய்திருந்தனர்.

நாசரேத் மர்காஷிஸ் மெட்ரிக்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் தங்கம் நளினா தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் கலா ஜேனட் காமராஜர் வாழ்க்கை வரலாறு குறித்து மாணவ,மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். மாணவி ஆர்த்திசா காமராஜர் பற்றி பேசினார். கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி மற்றும் பல்வேறு போட்டிகளில் பங்கு பெற்ற மாணவ,மாணவிகளுக்கு சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கப்பட்டன. இதில் ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஸ்பிக் நகர் பள்ளியில் பெற்றோர் தினவிழா!

திங்கள் 2, செப்டம்பர் 2024 3:16:46 PM (IST)


Sponsored Ads





Thoothukudi Business Directory