» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
புனித பிரான்சிஸ் சவேரியார் பள்ளியில் முன்னாள் மாணவர் இயக்க நூற்றாண்டு விழா மலர் வெளியீடு
வெள்ளி 12, ஜூலை 2024 11:34:33 AM (IST)

தூத்துக்குடி புனித பிரான்சிஸ் சவேரியார் மேனிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர் இயக்க நூற்றாண்டு விழா மலர் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு இயேசு சபை மதுரை மறைமாநிலத் தலைவர் அருள் தாமஸ் அமிர்தம் சே.ச.தலைமை தாங்கினார். தூத்துக்குடி சவேரியானா அதிபரும் முன்னாள் மாணவர் இயக்கத்தின் இயக்குநருமான அருள் ஆரோக்கியசாமி சே.ச., தாளாளர் அருள் பிரான்சிஸ் சேவியர் சே.ச., தலைமையாசிரியர் அருள்திரு. அமல்ராஜ் சே.ச. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நூற்றாண்டு விழா மலரை மதுரை மறைமாநில இயேசு சபைத் தலைவர் அருள் தாமஸ் அமிர்தம் வெளியிட, முன்னாள் மாணவரும் தொழிலதிபருமான திரு.பிரேம் வெற்றி அவர்கள் பெற்றுக்கொண்டார். விழா மலரை ஆசிரியர் யூஜின் அறிமுகம் செய்தார். முன்னாள் மாணவர் இயக்கத்தின் இயக்குநர் அருள் ஆரோக்கியசாமி சே.ச. மற்றும் தாளாளர் அருள் பிரான்சிஸ் சேவியர் சே.ச. ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னாள் மாணவர் இயக்கத்தின் தலைவர் ஹெர்மன் கில்டு, செயலர் இராஜசேகரன் ஆகியோர் அருள்தந்தையர்க்குப் பொன்னாடை அணிவித்தனர்.
இந்நிகழ்வில் தொழிலதிபர் தனபாலன், ஜூட் ரன், செல்வன் சில்வா, துறைமுக சபை ஊழியர் ரமேஷ், சாக்ரோ உள்ளிட்ட பல முன்னாள் மாணவர்களும் இந்நாள் ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர். முன்னதாக பள்ளியின் பாடற்குழுவைச் சார்ந்த மாணவர்கள் இறைவணக்கம் பாட, ஆசிரியர் ஜூடின் வரவேற்புரை வழங்கினார். மலர்க்குழுவின் பொறுப்பாசிரியர் நெய்தல் அண்டோ நன்றி கூறினார். நிகழ்வை ஆசிரியர் லியோ பேரின்பராஜ் தொகுத்து வழங்கினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டி அரசு பள்ளியில் நிழல் இல்லா நாள் செயல் விளக்கபயிற்சி
திங்கள் 7, ஏப்ரல் 2025 4:27:22 PM (IST)

தமிழ் மன்றத் தேர்வில் வெற்றி : மர்காஷிஸ் மாணவர்களுக்கு பாராட்டு விழா
வியாழன் 20, மார்ச் 2025 8:08:57 AM (IST)

தூத்துக்குடி மரியன்னைக் கல்லூரி சார்பில் பறவைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சனி 8, மார்ச் 2025 5:22:04 PM (IST)

நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் அறிவியல் மன்றவிழா : மாணவர்கள் அசத்தல்!
சனி 8, மார்ச் 2025 4:43:30 PM (IST)

தூத்துக்குடி திருச்சிலுவை ஆரம்பப் பள்ளியில் ஆண்டு விழா
ஞாயிறு 2, மார்ச் 2025 11:44:25 AM (IST)

கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
வெள்ளி 21, பிப்ரவரி 2025 3:18:31 PM (IST)
