» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் கூடைப்பந்து சிறப்பு பயிற்சி முகாம்!
வியாழன் 11, ஜூலை 2024 5:27:11 PM (IST)

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் கூடைப்பந்துக்கான ஒரு நாள் சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.
தலைமையாசிரியர் குணசீலராஜ் தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்தார். உதவி தலைமை ஆசிரியர் சார்லஸ் திரவியம் மற்றும் உடற்கல்வி இயக்குனர் பெலின் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் பயிற்சிக்கு வந்திருந்த மாணவர்களையும் பயிற்சி கொடுக்க வந்திருந்த பயிற்றுநர்களையும் வரவேற்றார்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கூடைப்பந்து அணியின் முன்னாள் வீரரும், சிறந்த கூடைப்பந்து பயிற்சியாளருமான கர்ணா மற்றும் தூத்துக்குடி வஉசி கல்லூரி கூடைப்பந்து அணியின் முன்னாள் வீரர் சூரியகுமார் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்.
கூடைப்பந்து விளையாட்டில் வீரர்கள் பின்பற்றக் கூடிய வழிமுறைகள், விளையாட்டு விதிகள், நுட்பங்கள் ஆகியவை கற்றுக்கொடுக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து, சீனியர் மற்றும் சூப்பர் சீனியர் அணி வீரர்களுக்கான கூடைப்பந்து போட்டி நடைபெற்றது. அதனடிப்படையில், மண்டல, மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்குபெறும் கூடைப்பந்து அணிகளுக்கான வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
போட்டியின் நடுவர்களாக உடற்கல்வி ஆசிரியர் தனபால் மற்றும் என்சிசி அலுவலர் சுஜித்செல்வசுந்தர் ஆகியோர் பணியாற்றினர். ஓவியக்கலை ஆசிரியர் அலெக்ஸன் கிரிஸ்டோபர் நன்றி கூறினார். பயிற்சி முகாமில் கலந்து கொண்ட வீரர்களையும், பயிற்றுவித்த பயிற்றுனர்களையும், முகாமிற்கு ஏற்பாடு செய்த ஆசிரியர்களையும் பள்ளியின் தாளாளர் , ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பாராட்டினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் பாரதியார் பிறந்த நாள் விழா
வெள்ளி 12, டிசம்பர் 2025 12:07:56 PM (IST)

இஞ்ஞாசியர் பள்ளியில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்வு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 5:35:18 PM (IST)

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 14, நவம்பர் 2025 7:42:49 AM (IST)

என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!
திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:46:02 AM (IST)


