» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

எட்டையாபுரம் துவக்கப்பள்ளியில் டெலஸ்கோப் பயிற்சி

வியாழன் 11, ஜூலை 2024 11:09:21 AM (IST)



எட்டையாபுரம்  தமிழ் பாப்திஸ்து துவக்கப்பள்ளியில் தொலைதூரப் பொருட்களை டெலஸ்கோப்பில் பார்வையிட மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.  

தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் வானியல் கருத்துக்களை பரப்புரை செய்திட ஒவ்வொரு மாவட்டத்திலும் அஸ்ட்ரோ கிளப் அமைக்கப்பட்டு அதன் மூலம் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வானியல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.  எட்டையாபுரம் தமிழ் பாப்திஸ்து  துவக்கப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் லால்பகதூர் கென்னடி தலைமை வகித்தார்.ஆசிரியை அன்புத்தாய்,ஜான்சி ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

ஆசிரியர் ஜோசப் ஆசிர் அனைவரையும் வரவேற்றார்.  தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் ஒருங்கிணைப்பாளர் முத்துமுருகன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கோள்கள் பற்றிய விழிப்புணர்வு அட்டைகள் வழங்கி தொலைதூர பொருட்களை டெலஸ்கோப்பில் பார்வையிடுவது குறித்து பயிற்சி அளித்தார்.  இதில் பள்ளி ஆசிரியர்கள் ஜானகி, பிரியா உள்பட ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியை எப்சி நன்றி கூறினார்.

இதேபோல் எட்டையாபுரம் வீரபாகு மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நடந்த நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் ஓம் சக்தி தலைமையில் தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி மாநில செயற்குழு உறுப்பினர் முத்துசாமி,தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் ஒருங்கிணைப்பாளர் முத்துமுருகன் மாணவர்களுக்கு தொலைதூர பொருட்களை டெலஸ்கோப்பில் பார்வையிடுவதுகுறித்தும் வானியல் குறித்தும் பயிற்சிஅளித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Thoothukudi Business Directory